தபால்சேவையில் முதலாம் உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தில் கைரேகை ஸ்கேனர் அததாவது பிங்கர் பிரின் இயந்திரம் நிச்சயம் பொருத்தப்படும் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வில் இதனைத் தெரிவித்த அவர்,
தபால்சேவையில் 2 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 168 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 234 ரூபாவாகவும், 2 ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 254 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 370 ரூபாவாகவும், 1 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 222 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 324 ரூபாவாகவும், 1ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தபால் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த 17 கோரிக்கைகளை நிறைவேற்ற இணக்கம் தெரிவித்துள்ளோம்.
மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது. கைரேகை ஸ்கேனர் அதாவது பிங்கர் பிரின் இயந்திரத்தை பொருத்துவது கட்டாயம் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
தபால் சேவையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் வழங்குவதற்கும், மேலதிக நேர கொடுப்பனவுக்கும் செலவாகுகிறது. ஆகவே பெறும் சம்பளத்துக்கு உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தின் முன்பாக நேற்று சேவையாளர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர் எதிர்க்கட்சியின் தொழிற்சங்கவாதி. தபால் சேவையாளர்களுக்கு மேற்சட்டை, காற்சட்டை, பாதனி மற்றும் ஒருசோடி காலுறை வழங்கப்படுகிறது.
ஆகவே இவர்கள் எவ்வழியில் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அடிபணிய போவதில்லை என்றார்.